/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரரை தாக்கிய கஞ்சா போதை நபர் கைது
/
போலீஸ்காரரை தாக்கிய கஞ்சா போதை நபர் கைது
ADDED : பிப் 09, 2026 06:09 AM
புளியந்தோப்பு: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை தாக்கிய, கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில், போலீஸ்காரர்கள் தாமோதரன், கார்த்திக் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்கிருந்த நபர் கஞ்சா புகைத்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, தரக்குறைவாக பேசியு ள்ளார்.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது, போலீஸ்காரர் தாமோ தரனை அந்த நபர் தாக்கினார்.
புளியந்தோப்பு போலீசார் விசாரணையில், அந்நபர் வியாசர்பாடி, கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த சஞ்சய், 24, என்பது தெரிந்தது. நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

