ADDED : ஆக 17, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல் விசாரணை சிறையில், சிறை காவலர்கள் நேற்று ரோந்து பணியின்போது, சுற்றுச்சுவர் அருகே பந்து போன்ற பொட்டல் கிடந்தது. அதை சோதனை செய்ததில், 16 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், சிறையில் காவலர்கள் வழக்கமான சோதனை மேற்கொண்ட போது, சூரியகுமார் என்ற கைதி மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரிடமிருந்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர். சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.