ADDED : மார் 14, 2024 12:23 AM

யானைகவுனி, பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடைக்கு, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வந்தது. அதில், கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வருவதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், மூவர் கும்பல் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், சேலம், சண்முக நகரத்தைச் சேர்ந்த பூபதி, 20, கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த சையத், 36, கொல்லம், புத்துாரைச் சேர்ந்த லதன்மோன், 46, என்பது தெரியவந்தது.
இவர்கள், ஒடிசா மாநிலத்தில் இருந்து, கஞ்சா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானைகவுனி போலீசாரிடம் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, 10 கிலோ கஞ்சா மற்றும் 46 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
