/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் குப்பை, மதுபாட்டில்களால் சீர்கேடு
/
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் குப்பை, மதுபாட்டில்களால் சீர்கேடு
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் குப்பை, மதுபாட்டில்களால் சீர்கேடு
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் குப்பை, மதுபாட்டில்களால் சீர்கேடு
ADDED : செப் 08, 2025 06:11 AM

சென்னை:பல்வேறு சேவைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சென்னை கலெக்டர் அலுவலக வளாகம், குப்பை கழிவுகள், மது பாட்டில்கள் குவிந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில், நீதிமன்றங்கள், ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாற்றுத்திறனாளி துறை என, பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு துறை ரீதியாகவும், பல்வேறு சேவைகளுக்காகவும், தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இந்த வளாகத்தினுள் அரசால் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' கழிவுகள், பழைய தண்ணீர் பாட்டில்கள், குப்பை குவிந்து, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. பல நாட்களாக குப்பை அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
ஒரே இடத்தில் நுாற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. அரசு அலுவலக வளாகத்தில் இவ்வளவு பாட்டில்கள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் வளாகத்தில், பழைய வாகனங்கள் பயனற்று விடப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலக வளாகத்தை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், குப்பை மற்றும் மதுபாட்டில்களை அகற்றி, சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல துறை சேவைக்காக வரும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.