/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை நடுவே குப்பைத்தொட்டி வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
/
சாலை நடுவே குப்பைத்தொட்டி வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
சாலை நடுவே குப்பைத்தொட்டி வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
சாலை நடுவே குப்பைத்தொட்டி வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
ADDED : பிப் 21, 2024 02:17 AM

அமைந்தகரை:சாலையின் நடுவே, காவு வாங்க காத்திருக்கும் குப்பைத் தொட்டிகளால் விபத்து அபாயமும், சுகாதார சீர்கேடும் நிலவுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில், அய்யாவு காலனி பகுதியில், கண்ணப்பர் தெரு மற்றும் கோவிந்தா தெரு உள்ளன.
இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து சேகரமாகும் குப்பையை சேகரிக்க, இரு தெருக்களின் சந்திப்பின் சாலையோரத்தில், மூன்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இங்கு, தினசரி குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் லாரி ஊழியர்கள், தொட்டிகளில் இருந்து குப்பையை எடுத்துவிட்டு, சாலையின் நடுவே தொட்டிகளை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
காலப்போக்கில் இந்த தொட்டிகள், பாதி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறும் பட்சத்தில், குப்பைத் தொட்டியின் பிடிமானக் கம்பியில் இடித்து, காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல், குப்பையை சரிவர எடுக்காததால், சாலை முழுதும் சிதறிக் கிடக்கிறது. இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய குப்பைத் தொட்டிகள் உள்ள இடத்தில், சிலர் சிறுநீர் கழித்து வருகின்றனர்.
இதனால், அவ்வழியாகச் செல்வோர், முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, குப்பைத் தொட்டிகளை எடுத்து, சரியான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

