/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அணுகு சாலை கால்வாயில் குப்பை அகற்றம்
/
அணுகு சாலை கால்வாயில் குப்பை அகற்றம்
ADDED : ஜன 08, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரத்தை அடுத்த பெருங்களத்துாரில் இருந்து மதுரவாயலை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலையை ஒட்டியுள்ள பகுதிமக்களின் வசதிக்காக, அணுகு சாலை போடப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையோர கால்வாய் குப்பை, மரம், இறைச்சி, கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது.
பல இடங்களில் இருந்து கழிவுகளை மூட்டை மூட்டையாக எடுத்து வந்து, அணுகு சாலை கால்வாயில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், திருநீர்மலை சந்திப்பு முதல் தாம்பரம் வரை, கால்வாயில் தேங்கியுள்ள கழிவை, ஜே.சி.பி., வாகனம் மூலம், மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது.