/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கிடங்கில் பூங்கா பெருங்குடியில் கருத்து கேட்பு
/
குப்பை கிடங்கில் பூங்கா பெருங்குடியில் கருத்து கேட்பு
குப்பை கிடங்கில் பூங்கா பெருங்குடியில் கருத்து கேட்பு
குப்பை கிடங்கில் பூங்கா பெருங்குடியில் கருத்து கேட்பு
ADDED : ஜன 03, 2024 12:24 AM
சென்னை,சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கு 225 ஏக்கர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது. இவற்றில் பல ஆண்டுகளாக சேர்ந்துள்ள 30 லட்சம் கன மீட்டர் குப்பையை முழுமையாக மறுசுழற்சி செய்து, 100 சதவீத நிலத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
'பயோ மைனிங்' முறைக்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, எஞ்சியுள்ள நிலத்தை மீட்கும் பணியும் நடந்து வரும் நிலையில், அங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பான பொதுமக்கள் பங்களிப்பு கூட்டம், வரும் 8ம் தேதி காலை 11:00 மணியளவில் நடைபெற உள்ளது.
பள்ளிக்கரணை, ஐ.ஐ.டி., காலனியில் உள்ள, மாநகராட்சி சமுதாய நல கூடத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.