/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி இடத்தில் குப்பை குவிப்பு நெற்குன்றம்வாசிகள் மறியல்
/
காலி இடத்தில் குப்பை குவிப்பு நெற்குன்றம்வாசிகள் மறியல்
காலி இடத்தில் குப்பை குவிப்பு நெற்குன்றம்வாசிகள் மறியல்
காலி இடத்தில் குப்பை குவிப்பு நெற்குன்றம்வாசிகள் மறியல்
ADDED : நவ 17, 2024 10:37 PM
நெற்குன்றம்:வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டில், என்.டி., படேல் சாலை உள்ளது. இச்சாலை அருகே தனியாருக்குச் சொந்தமான காலி மைதானம் உள்ளது.
இந்த காலி இடத்தை சிலர், குப்பை மற்றும் கழிவு மண் கொட்டும் குப்பை கிடங்காக மாற்றி உள்ளனர். தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கட்டட கழிவுகள், கழிவுநீர் கலந்த மண் ஆகியவை கொட்டப்படுகின்றன.
இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அடிக்கடி வரும் லாரிகளால், அருகில் உள்ள குடியிருப்புகளில் துாசி படர்ந்து விடுகிறது.
மேலும், இங்கு நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்கள் மறைவில், சமூகவிரோத செயல்களும் நடக்கின்றன. இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த பிப்., மாதம் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேற்று அப்பகுதி மக்கள், கொசுவர்த்திகளுடன், மைக் மற்றும் 'ஸ்பீக்கருடன்' மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ., கணபதி, மண்டல குழு தலைவர் ராஜன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.