/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை தொட்டி அருகே குவிக்கப்படும் குப்பை
/
குப்பை தொட்டி அருகே குவிக்கப்படும் குப்பை
ADDED : ஏப் 10, 2025 12:38 AM

விருகம்பாக்கம், விருகம்பாக்கத்தில் குப்பை தொட்டி அருகே உள்ள காலி இடத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கோடம்பாக்கம் மண்டலம் 129 வது வார்டு விருகம்பாக்கத்தில் காமராஜர் சாலை உள்ளது.
அதே சாலையில் இருந்து பிரியும் டாக்டர். அம்பேத்கர் தெரு உள்ளது. இந்த இரு பகுதிகளிலும் சாலையோரம் மாநகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பை தொட்டிகள் பின்புறம் காலி இடங்கள் அமைந்துள்ளன.
அப்பகுதியை சேர்ந்தவர்களும் மாநகராட்சி குப்பை அகற்றும் ஒப்பந்த தனியார் நிறுவன ஊழியர்களும் குப்பை தொட்டியில் குப்பை கொட்டுவதுடன், காலி இடத்திலும் குப்பையை கொட்டி வருகின்றனர்.
இதனால், மலை போல் குப்பை குவிந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர் கேடு நிலவி வருகிறது. மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

