/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாளம்பட்டு கூவம் ஆறு கரையோர குப்பைக்கு தீ வைப்பு
/
அடையாளம்பட்டு கூவம் ஆறு கரையோர குப்பைக்கு தீ வைப்பு
அடையாளம்பட்டு கூவம் ஆறு கரையோர குப்பைக்கு தீ வைப்பு
அடையாளம்பட்டு கூவம் ஆறு கரையோர குப்பைக்கு தீ வைப்பு
ADDED : ஜூலை 08, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், மதுரவாயல் அருகே, கூவம் கரையோரம் குவிக்கப்பட்டிருந்த குப்பை தீப்பிடித்து எரிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாளம்பட்டு கூவம் கரையோரம் தெர்மாகோல் உள்ளிட்ட குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டிருந்தன.
நேற்று மதியம் இந்த குப்பை கழிவுகளுக்கு, மர்ம நபர் தீ வைத்துள்ளார். கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி முழுதும் கரும் புகை சூழ்ந்தது. தனியார் தண்ணீர் லாரி வாயிலாக, தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதில், கேட்பாரற்று கிடந்த லோடு ஆட்டோ ஒன்றும் தீக்கிரையானது.