/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவின் கலை குயில்ட் கண்காட்சி துவக்கம்
/
கவின் கலை குயில்ட் கண்காட்சி துவக்கம்
ADDED : ஜன 20, 2024 01:02 AM

ஆழ்வார்பேட்டைசென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கரா ஹாலில், 'குயில்ட் இந்தியா' அறக்கட்டளை சார்பில், குறை ஒன்றும் இல்லை எனும் 'அபண்டன்ஸ்' கவின் கலை குயில்டுகளின் கண்காட்சி, நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது.
ஓவியரும், நடிகருமான சிவகுமார், ஹிந்து நாளிதழ் முரளி, சுந்தரம் பைனான்ஸ் நிறுவன அதிகாரி சந்தியா, சங்கரா ஹால் உரிமையாளர் உஷா சரவணன் ஆகியோர், கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நாட்டின் முதல் குயில்டிங் ஸ்டூடியோவான, சென்னையில் உள்ள 'தி ஸ்கொயர் இன்ச்' ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி, தையல் கலை பயின்று வரும் மாணவர்களுக்காக வரும், 22ம் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சி குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வர்ஷா மற்றும் டீனா கட்வால் கூறியதாவது:
பெரும்பாலும் 'குயில்ட்' என்றால் படுக்கை விரிப்புகள் என்று தான் நினைக்கின்றனர். ஆனால், அதில் கவின் கலையோடு செய்யலாம் என்பதை நிரூபிக்க, குயில்ட் இந்தியா சார்பில் இக்கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.