/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கவின்கேர் எபிலிட்டி' விருது நவ., 8க்குள் விண்ணப்பிக்கலாம்!
/
'கவின்கேர் எபிலிட்டி' விருது நவ., 8க்குள் விண்ணப்பிக்கலாம்!
'கவின்கேர் எபிலிட்டி' விருது நவ., 8க்குள் விண்ணப்பிக்கலாம்!
'கவின்கேர் எபிலிட்டி' விருது நவ., 8க்குள் விண்ணப்பிக்கலாம்!
ADDED : அக் 10, 2024 12:50 AM
சென்னை, மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும், 'கவின்கேர் எபிலிட்டி' விருது பெற, நவ., 8க்குள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் விடாமுயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், கவின்கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் எபிலிட்டி பவுண்டேஷன் இணைந்து, 2003 முதல், 'கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ், கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்ரி' என்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 22 ஆண்டுகளில், 95 மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 23வது கவின்கேர் எபிலிட்டி விருது பெற, ஒருவர் தங்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ விண்ணப்பிக்கலாம்.
தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை படைத்த, இந்தியாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், நவம்பர் 8க்குள், www.abilityfoundation.org அல்லது www.cavinkare.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
வரும் விண்ணப்பங்களில் இருந்து, நேர்காணல் வாயிலாகவும், நேரடி ஆய்வு நடத்தியும், தகுதியான நபர்கள் குறும்பட்டியலுக்கு தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து, நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்த நடுவர் குழு, விருது பெறும் சாதனையாளர்களை தேர்வு செய்யும்.
மேலும் விவரங்களுக்கு, 89396 75544 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கவின்கேர் நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

