/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - வேளச்சேரி வாலிபர் உயிரிழப்பு நண்பர்கள் மீது கொலை வழக்கு
/
பொது - வேளச்சேரி வாலிபர் உயிரிழப்பு நண்பர்கள் மீது கொலை வழக்கு
பொது - வேளச்சேரி வாலிபர் உயிரிழப்பு நண்பர்கள் மீது கொலை வழக்கு
பொது - வேளச்சேரி வாலிபர் உயிரிழப்பு நண்பர்கள் மீது கொலை வழக்கு
ADDED : மார் 31, 2025 03:32 AM
துரைப்பாக்கம்:வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம், 27. பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் அப்பு, 24.
கடந்த 28ம் தேதி இரவு, ஜீவரத்தினம், அப்பு, அவரது நண்பர்கள் சேர்ந்து, அப்பு வீட்டில் மது அருந்தினர்.
ஏற்கனவே, அப்புவின் உறவினர் பெண்ணிடம் ஜீவரத்தினம் தவறாக பழகி உள்ளார். இது குறித்து மது அருந்தி கொண்டிருந்தபோது, அப்புவிடம் கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், ஐந்து பேர் சேர்ந்து, ஜீவரத்தினத்தை கத்தியால் குத்தினர். பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
துரைப்பாக்கம் போலீசார், அப்பு உள்ளிட்ட ஐந்து பேர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஜீவரத்தினம் இறந்தார். இதையடுத்து போலீசார், ஐந்து பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தனர்.