UPDATED : செப் 12, 2026 10:47 PM
ADDED : செப் 12, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் முதலாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு 7:51 மணி முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
