/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறி கட்டிய கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு
/
விதிமீறி கட்டிய கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு
ADDED : ஆக 15, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம், வளசரவாக்கத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.
வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டு சுரேஷ் நகர் இரண்டாவது தெருவில், இரண்டு மாடி கட்டடம் உள்ளது. மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற வரைபடத்தைவிட, விதிகளை மீறி இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள், 2024ம் ஆண்டு 'நோட்டீஸ்' வழங்கினர். இதை எதிர்த்து, கட்டட உரிமையாளர் நீதிமன்றம் சென்றார். கட்டட வரைபடத்தை மறுவரையறை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, அந்த கட்டடத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.

