/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது.. கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் சிறுவன் உடல்
/
பொது.. கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் சிறுவன் உடல்
பொது.. கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் சிறுவன் உடல்
பொது.. கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் சிறுவன் உடல்
ADDED : அக் 07, 2024 01:23 AM
கோயம்பேடு:கோயம்பேடு, சின்மயா நகர் குலசேகரபுரத்தில் குடிநீர் வாரிய கழிவு நீர் உந்து நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை, இங்குள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில், சிறுவனின் உடல் மிதப்பதாக, கோயம்பேடு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் கோயம்பேடு, சின்மையா நகர் மணவாளன் சாலையைச் சேர்ந்த வசந்தகுமார், 16, என, தெரியவந்தது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
வசந்தகுமார் 10ம் வகுப்பு தோல்வி அடைந்ததால், வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும், மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று அதிகாலையில், வீட்டிற்கு வந்த வசந்தகுமாரை, அவரது தாய் திட்டியுள்ளார்.
இதனால் சாகப் போவதாக கூறி சென்ற வசந்தகுமார், கழிவுநீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.