ADDED : மே 16, 2025 12:19 AM

அ நிறம் | அளவு
திரு.வி.க., நகர், :பெரம்பூர், தீட்டி தோட்டம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குரியன் ஜார்ஜ், 49; அதே பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார்.
இவர், கடந்த 9ம் தேதி இரவு, 50,000 ரூபாயை வீட்டில் உள்ள டேபிள் அலமாரியில் வைத்துவிட்டு, கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பணம் திருடு போனது தெரிந்தது. இது குறித்து விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொடுங்கையூர், ஜாம்புலி தெருவைச் சேர்ந்த கலீமுல்லா, 20, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், கலீமுல்லா நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர்களிடம் இருந்த மொபைல் போன், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
