/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோர் நல மருத்துவமனை விரைவில் திறப்பு
/
முதியோர் நல மருத்துவமனை விரைவில் திறப்பு
ADDED : ஜன 04, 2024 12:16 AM
சென்னை, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் ஜார்ஜி ஆப்ரஹாம், நாராயணன் பிரசாத், சந்தோஷ் வர்கீஸ் ஆகியோர் இணைந்து எழுதிய, 'வளர்ந்து வரும் நாடுகளில் முதிய வயது பிரிவினரில் இதயநாள மற்றும் சிறுநீரக நோய்' என்ற புத்தகத்தை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
மருத்துவ துறையில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு, இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவ துறையில் சிறந்த படைப்புகளை ஆவணப்படுத்துதல், வருங்கால மருத்துவ துறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த புத்தகம் ஆவணப்படுத்தி இருப்பதன் வாயிலாக, எதிர்காலத்தில் தொற்றா நோய் பாதிப்புகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
தமிழக அரசு சார்பில், தொற்றா நோய் கட்டுப்படுத்துவதிலும், முதியவர்களுக்கான பிரத்யேக மருத்துவமனையை செயல்படுத்த உள்ளது. அந்த வகையில், கிண்டி முதியோர் நல மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.