/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால்வாய் பணிகள் ஜெர்மன் குழுவினர் ஆய்வு
/
வடிகால்வாய் பணிகள் ஜெர்மன் குழுவினர் ஆய்வு
ADDED : அக் 07, 2025 12:31 AM

பெருங்குடி, சென்னை வந்த ஜெர்மன் வங்கி அதிகாரிகள், பெருங்குடியில் நடந்துவரும் வடிகால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், ஜெர்மன் வங்கியான கே.எப்.டபிள்யூ., வங்கியில் கடன் பெற்று, சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில், பெருங்குடி மண்டலம், வார்டு 182க்கு உட்பட்ட பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளில், 82 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால்வாய் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தென் சென்னையின் மேற்கு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கலந்து, அங்கிருந்து, பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக கடலில் கலக்கிறது. இதில், சதுப்பு நிலத்தை ஒட்டி குறிப்பிட்ட பகுதி அமைந்துள்ளதால், இப்பகுதி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும்.
எனவே, மழைக்காலம் நெருங்குவதால், வடிகால்வாய் பணிகள் எந்நிலையில் உள்ளதென அறிய, கே.எப்.டபிள்யூ., வங்கியின் அதிகாரிகள் நேற்று பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.