/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கானா பாடகி, இயக்குனர் மீது போலீசில் புகார்
/
கானா பாடகி, இயக்குனர் மீது போலீசில் புகார்
ADDED : டிச 05, 2024 12:27 AM
வியாசர்பாடி,மதக்கலவரத்தை துாண்டும் வகையில், அய்யப்பன் பாடல்களை பாடி வெளியிட்ட, கானா பாடகி மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இரு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நீலம் பவுண்டேஷன் சார்பில், இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், கானா பாடகி இசைவாணி, மத கலவரத்தை துாண்டும் வகையில், 'ஐ அம் சாரி அய்யப்பா' என்ற பாடலை பாடி உள்ளார்.
இது, அய்யப்ப பக்தர்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஹிந்துகளின் மனதை புண்படுத்தும் வகையிலும் உள்ளது.
எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து திருக்கோவில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் எம்.கே.பி., நகர் காவல் நிலையத்தில், சுபாஷ், 34, என்பவரும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் வளர்மதி, 35, என்பவரும், நேற்று புகார் அளித்துள்ளனர்.