/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மீது பைக் மோதி சிறுமி உயிரிழப்பு
/
லாரி மீது பைக் மோதி சிறுமி உயிரிழப்பு
ADDED : ஜன 04, 2026 05:51 AM
கோயம்பேடு: கோயம்பேடு மேம்பாலத்தில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், ஒன்பது வயது சிறுமி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் மகள் பிரதிக்சா, 9, மகள் அர்சத், 5. பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால், மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள அவரது உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு வந்திருந்தனர்.
பிரதிக்சா மற்றும் அர்சத்திற்கு முடி வெட்டுவதற்காக, தன் 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், சோமசுந்தரம் நேற்று அழைத்து சென்றார். கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில், நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.
இதில், சிறுமி பிரதிக்சா மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.மற்ற இருவரும், காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிரதிக்சா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் செல்வகுமார், 28, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

