/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி படுகாயம்
/
முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி படுகாயம்
முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி படுகாயம்
முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி படுகாயம்
ADDED : நவ 18, 2025 04:43 AM
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்துார், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரசாத் மகள் பிருந்தா, 9. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, வீட்டின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.
அவரது இடது மற்றும் வலது கை மணிக்கட்டு மற்றும் இடது தோள்பட்டை ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து மருத்துவமனை டாக்டர்கள் அளித்த தகவலின்படி, பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.