/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலன் கண்முன் 7வது மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை
/
காதலன் கண்முன் 7வது மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை
காதலன் கண்முன் 7வது மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை
காதலன் கண்முன் 7வது மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை
ADDED : ஆக 25, 2025 05:31 AM
சென்னை; திருமணம் செய்ய காதலன் மறுத்ததால், ஏழாவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராயபுரம், புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா, 25. இவரும், வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையைச் சேர்ந்த தர்ஷன், 26, என்பவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன், பிப்., 12ம் தேதி 'கிரீம் சென்டர்' என்ற ஹோட்டலில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் ஹர்ஷிதாவிடம், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என தர்ஷன் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹர்ஷிதா, தன் அக்கா கணவர் பிரபுல், 37, வழக்கறிஞர் ராஜேஷ், 42, ஆகியோரை அழைத்துக் கொண்டு தர்ஷன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஹர்ஷிதா, 'தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தர்ஷனிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால், தர்ஷன் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர், அக்குடியிருப்பின் ஏழாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து காதலன் தர்ஷன் கண் முன்னே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

