/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து போலீசாருக்கு குளுக்கோஸ்
/
போக்குவரத்து போலீசாருக்கு குளுக்கோஸ்
ADDED : பிப் 23, 2024 12:28 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 55 போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட, 2,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு குளுக்கோஸ் வழங்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார்.
இதன்படி, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் இலவசமாக குளுக்கோஸ் வழங்கப்பட்டது.
கிழக்கு மண்டலத்திற்கு, 3,744, தெற்கு மண்டலத்திற்கு, 3,744, வடக்கு மண்டலத்திற்கு, 3,744 மற்றும் திட்டமிடல் பிரிவு தலைமையகம், 288 என, மொத்தம், 11,520 குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன.