/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் 'ஆட்டை'
/
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் 'ஆட்டை'
ADDED : நவ 12, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு,
பூண்டி ஒன்றியம் எல்லப்ப நாயுடுபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலா, 46, ரேணுகா, 41, கவிதா, 36. மூவரும், ஆடுகள் வளர்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை இவர்களது ஆடுகளை, புதுார் ஏரியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.
திடீரென இவர்களது உறவினர் ஒருவர் இறந்ததால், மூவரும் ஆடுகளை விட்டு விட்டு வந்தனர். மாலை 5:30 மணியளவில் சென்று பார்த்த போது, மேய்ச்சலில் இருந்த 11 ஆடுகளும் திருடு போனது தெரிந்தது.

