/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில்லா ஓட்டுனர்கள் 113 பேருக்கு தங்கம்
/
விபத்தில்லா ஓட்டுனர்கள் 113 பேருக்கு தங்கம்
ADDED : ஜன 12, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையில், 20 ஆண்டுகள் மாசற்று பணியாற்றிய, 113 ஓட்டுனர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அந்த வகையில், பணி காலத்தில் வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல், வாகனங்களை பராமரிக்கும் தன்மை, எரிபொருள் சேமிப்பு, நன்னடத்தை மற்றும் தொடர் பணி உள்ளிட்ட அடிப்படையில், ஓட்டுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும், தலா 4 கிராம் தங்கத்தை மேயர் பிரியா ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று வழங்கினார்.