ADDED : டிச 06, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தென்மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., மாணவர் தங்கம் வென்றார். இந்திய பல்கலைகள் சங்கங்கள் மற்றும் ஆந்திரா மாநிலம், குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலை சார்பில், தென்மேற்கு மண்டல பல்கலைக்கு இடையிலான பளு துாக்குதல் போட்டி நடந்தது.
போட்டியில், தென் மேற்கு மண்டல அளவிலான தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்கலை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில்,சென்னையை அடுத்து காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., மாணவர் கிருஷ்ண பாரதி, 89 கிலோ எடை பிரிவில் பங்கேற்று, 320 கிலோ எடை துாக்கி முதலிடத்தை பிடித்தார்.