தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தங்கம் கடத்தல் வழக்கு: 4 பேர் விடுதலை

தங்கம் கடத்தல் வழக்கு: 4 பேர் விடுதலை

தங்கம் கடத்தல் வழக்கு: 4 பேர் விடுதலை


UPDATED : நவ 12, 2026 10:33 PM

ADDED : நவ 12, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 10:33 PM ADDED : நவ 12, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தங்கம் கடத்தல் வழக்கில், நான்கு பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் சோதனைச் சாவடியில், கடந்த 2017 பிப்., 4ம் தேதி ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தில், போலீசார் சோதனை செய்தனர்.

அதில் பயணத்த மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பால், 32, முகமது ஷஹாபுதீன், 38, கஜனஜுமுதீன், 42 முகமது ஜமாலுதின், 29 ஆகியோர், மியான்மரில் இருந்து மிசோரம் வாயிலாக சென்னைக்கு தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு எழும்பூரில் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வித்யா, ‘‘பறிமுதல் செய்ததாகக் கூறப்படும், 20 தங்க கட்டிகளில் யாரிடம் இருந்து, எத்தனை கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை. வெளிநாட்டு தங்கம் தானா என்பதற்கான ஆய்வு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலைச் செய்து உத்தரவிடப்படுகிறது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us