UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:56 PM
ராமாபுரம்: ராமாபுரம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்த பெயின்டர் ஜெயகுமார், 44, வீட்டில், கடந்த 13ல் புகுந்து 1.85 கிலோ வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் இருவர் திருடி தப்பினர்.
ராமாபுரம் போலீசார் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது, ஆழ்வார் திருநகர் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த தருண்குமார், 20, அவரது கூட்டாளி நவீன்குமார், 21, என தெரியவந்தது.
இதில் தருண்குமார், ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் எம்.ஜி.ஆர்., நகர் போலீசாரால் 26ல் கைதாகி சிறையில் இருப்பது தெரிந்தது. நவீன்குமாரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
நவீன்குமாரிடம் இருந்து, தங்கமுலாம் பூசப்பட்ட ஆறு கவரிங் வளையல்கள் மற்றும் ஜடைமாட்டி ஆகிய நகைகள் மீட்கப்பட்டன. வீட்டில் புகுந்து திருடிய தருண்குமார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நவீன்குமாருக்கு, தங்கள் எனக்கூறி, கவரிங் வளையல்கள் மற்றும் ஜடைமாட்டியை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.
