/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா' 'மிஸ் அண்ட் மிஸஸ்' அழகு போட்டி:தோல் தானம் விழிப்புணர்வு
/
'கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா' 'மிஸ் அண்ட் மிஸஸ்' அழகு போட்டி:தோல் தானம் விழிப்புணர்வு
'கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா' 'மிஸ் அண்ட் மிஸஸ்' அழகு போட்டி:தோல் தானம் விழிப்புணர்வு
'கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா' 'மிஸ் அண்ட் மிஸஸ்' அழகு போட்டி:தோல் தானம் விழிப்புணர்வு
ADDED : ஜன 22, 2024 01:22 AM

தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, 'விண்டோ என்டர்டெய்மென்ஸ் மற்றும் திரைப்பட இயக்குனர் விஜய் இணைந்து, 'மிஸ் அண்ட் மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா - -2024' என்ற அழகு போட்டியை நடத்தியது.
இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 700 பேர் போட்டியில் பங்கேற்க பதிவு செய்தனர்.
இதில், மிஸ் பிரிவில் 30 பேரும், மிஸஸ் பிரிவில் 30 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப்போட்டி, நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்தது.
இதில், மிஸ் பிரிவில் முதலிடம் பிடித்தவருக்கு, நடிகை எமிஜாக்சன் கிரீடம் சூட்டி பாராட்டினார். மிஸஸ் பிரிவில் முதலிடம் பிடித்தவருக்கு, நடிகை ஸ்ரேயா கிரீடம் சூட்டி பாராட்டினார்.
திரைப்பட இயக்குனர் விஜய் பேசியதாவது:
சிதைந்த முகத்தை அழகான முகமாக மாற்ற, தோல் தானம் முக்கிய பங்காற்றுகிறது. இறந்த 4 மணி நேரத்தில், 15 மீட்டர் நீளம் கொண்ட தோல் உடலில் இருந்து எடுக்க முடியும். தமிழகத்தில், தோல் வங்கிகள் உள்ளன.
ஆனால், கண் உள்ளிட்ட உறுப்பு தானம் போல், தோல் தானத்திற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், யாரும் தானம் வழங்க முன்வருவதில்லை. தோல் தானம் குறித்து பலருக்கு தெரிவதில்லை. விபத்து, ஆசிட் வீச்சால் சிதைந்து போன முகத்திற்கு, தோல் தானத்தால் மறுவாழ்வு கிடைக்கும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியை, விண்டோ என்டர்டெய்மென்ஸ் நிர்வாகிகளான சரவணன், கோபிநாத் ரவி ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
நடிகை பார்வதி நாயர், நடிகர் ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.