/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா
/
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா
ADDED : ஜன 11, 2024 10:14 AM

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி தங்கக் கடற்கரை சந்தோசம் அரங்கில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பெருந்தமிழன் சண்முகம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி, பெருந்தமிழன் வி.ஜி. சந்தோசம், பாலாஜி இணைந்து குத்துவிளக்கு ஏற்றி பொன்விழா ஆண்டை துவக்கி வைத்தனர்.
திருவாளர்கள் வேலுப்பிள்ளை, மதிவாணன், சுந்தர வடிவேல், செல்வராஜ், ராஜரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் இந்தோனேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பெருந்தமிழன் விசாகனின் தினம் மலரும் சிந்தனைப் பூக்கள் கவிதை நூலும், தமிழ் ஈழத்தைச் சேர்ந்த சகோதரி சசிகலாவின் ஆய்வுகளின் அணிவகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.