ADDED : மார் 12, 2024 12:42 AM

அ நிறம் | அளவு
ராமாபுரம்,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுகுதேவ், 33. இவரது மனைவி பாவனா, 29. இவர்கள் போரூர் பூத்தப்பேடில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு சென்றனர். இரவு 11:00 மணியளவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விருகம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி மற்றும் கிண்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள், ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் நாசமானது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
