/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.33 லட்சம் மதிப்பு 'சரக்கு' எரிந்து நாசம்
/
ரூ.33 லட்சம் மதிப்பு 'சரக்கு' எரிந்து நாசம்
ADDED : செப் 02, 2025 02:03 AM

அம்பத்துார்:அம்பத்துார் தொழிற்பேட்டை அருகே, தமிழ்நாடு வாணிப கழகத்தின் 'டாஸ்மாக்' கிடங்கு செயல்படுகிறது. அந்த கிடங்கிற்கு, கோயம்புத்துாரில் இருந்து, 33 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 24,000 மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு, ஈச்சர் லாரி, நேற்று அதிகாலை 5:30 மணியளவில் வந்தது.
இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், டாஸ்மாக் கிடங்கு பகுதியில் மின் கம்பிகள், தாழ்வாக தொங்கியபடி கிடந்ததாக கூறப்படுகிறது. அந்நேரம் அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியில் சிக்கி, மின் கம்பி அறுந்துள்ளது. இதனால், தீப்பொறி ஏற்பட்டு, லாரி மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயும், இறக்குமதிக்காக கொண்டுவரப்பட்ட, 24,000 மது பாட்டில்களும் எரிந்தன.
தகவலறிந்து சென்ற அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
அதற்குள், லாரியில் இருந்த அனைத்து மதுபாட்டில்களும் எரிந்து நாசமாகின. லாரியின் பின்பக்க பாகம் கருகியது. சம்பவம் குறித்து அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.