/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை தடுப்பில் ஏறி அரசு பஸ் விபத்து
/
சாலை தடுப்பில் ஏறி அரசு பஸ் விபத்து
ADDED : அக் 14, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின், விழுப்புரம் பணிமனையை சேர்ந்த பேருந்து, 15 பயணியருடன், நேற்று காலை மாதவரம் டிப்போவில் இருந்து, சென்னை புறவழிச்சாலை வழியாக, விழுப்புரம் நோக்கி சென்றது.
பேருந்தை சுந்தர்ராஜ், 50, என்பவர் ஓட்டினார். பாலாஜி, 26, என்பவர் நடத்துநராக பணியாற்றினார். மேற்கு தாம்பரம், 'ஸ்டெப் ஸ்டோன்' குடியிருப்பு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை மையத்தடுப்பில் ஏறி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணியர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.