ADDED : ஏப் 23, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில், உடல் உறுப்புகள் தானம் செய்த, ஆந்திரா சிறுவனின் உடலுக்கு, அரசு மரியாதை செய்யப்பட்டது.
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம், உழவபாடு கே ராஜூபாலம் கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் சாத்விக், 17. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி, மூளைசாவு ஏற்பட்டு இறந்தார்.
அவரது பெற்றோர் விருப்பத்தின்படி, சிறுவனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், சிறுகுடல் தானமாக அளிக்கப்பட்டது.
அரசின் உத்தரவின்படி, மருத்துவமனையில் சிறுவனின் உடலுக்கு, சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில், தென்சென்னை கோட்ட அலுவலர் ரங்கராஜன், ஆலந்துார் தாசில்தார் குப்பம்மாள் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.