/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வை இழந்த 'செக்யூரிட்டி'க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர அரசு மருத்துவமனைக்கு உத்தரவு
/
பார்வை இழந்த 'செக்யூரிட்டி'க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர அரசு மருத்துவமனைக்கு உத்தரவு
பார்வை இழந்த 'செக்யூரிட்டி'க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர அரசு மருத்துவமனைக்கு உத்தரவு
பார்வை இழந்த 'செக்யூரிட்டி'க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர அரசு மருத்துவமனைக்கு உத்தரவு
ADDED : அக் 28, 2025 12:28 AM
சென்னை: கண்புரை அறுவை சிகிச்சையில் பார்வை இழந்த, தனியார் நிறுவன ஊழியருக்கு 10 லட்சம் ரூபாய், அயனாவரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை நிர்வாகம், இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காரனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் கே.டி.தனசேகரன். தனியார் நிறுவனத்தில், 'செக்யூரிட்டி'யாக பணிபுரிந்து வந்தார்.
இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
என் வலது கண் பார்வை மங்கலானதால், கடந்தாண்டு சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். கடந்தாண்டு மே., 9ல் எனக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது.
ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும் பார்வை தெளிவாக இல்லை. கண்ணில் கடும் வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, வலது கண் பார்வையை முழுமையாக இழக்க நேரிட்டது.
இதற்கு, டாக்டர்களின் தவறான சிகிச்சைதான் காரணம். அவர்களின் கவனக் குறைவால் பார்வை இழந்த நிலையில், என்னால் தொடர்ச்சியாக பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, இ.எஸ்.ஐ., மருத்துவமனை தரப்பில், 'மனுதாரருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், எவ்வித கவனக்குறைவும் நடக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த ஆணையம், 'டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாகவே மனுதாரர் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, மனுதாரருக்கு அரும்பாக்கம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய்; வழக்கு செலவுக்காக 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

