sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசாணை வெளியீடு: துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் 5 நாட்களுக்கு பின் வாபஸ்

/

அரசாணை வெளியீடு: துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் 5 நாட்களுக்கு பின் வாபஸ்

அரசாணை வெளியீடு: துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் 5 நாட்களுக்கு பின் வாபஸ்

அரசாணை வெளியீடு: துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் 5 நாட்களுக்கு பின் வாபஸ்


ADDED : ஜூலை 31, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், அம்பத்துார், கல்யாணபுரத்தில் சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மண்டலத்தைச் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டும்; தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐந்தாவது மண்டலத்தைச் சேர்ந்த ஜோதி, 43, குட்டியம்மாள், 41, அஷ்ரப் பேகம், 40, மற்றும் ஆறாவது மண்டலத்தைச் சேர்ந்த வசந்தி, 39, உள்ளிட்டோர், ஆறாவது நாளாக உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மகாலட்சுமி, 39, என்கிற துாய்மை பணியாளர் உடல் நலக்குறைவால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

துாய்மை பணியாளர்கள் எழுப்பும் கோரிக்கைகள் குறித்து விசாரிக்க, தொழில் தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என, கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், அரசாணை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் வீரராகவராவ், நேற்று அரசாணை வெளியிட்டார்.

இதன் வாயிலாக, துாய்மை பணியாளர்கள் தொழில் தீர்ப்பாயத்தை அணுகி, பணி நிரந்தரம், தனியார் மயமாக்குவதை தடுப்பது, பிடிக்கப்பட்ட சம்பளத்தை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள முடியும் எனவும், சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மண்டலத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பயனடைவர் எனவும் தெரிகிறது.

அரசாணை வெளிடப்பட்டதையடுத்து, உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது. மேலும், அங்கு 800-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஒன்று கூடி, இனிப்புகள் வழங்கி, குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

மண்டல அலுவலம் முற்றுகை

தண்டையார்பேட்டை, ஜூலை 31--

துாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி வழங்குவதை கண்டித்து, துாய்மை பணியாளர்கள், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செங்கொடி சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில், துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டன.

இதுகுறித்து, சென்னை மாவட்ட பொதுச்செயலர் சீனிவாசலு கூறியதாவது:

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கான சம்ப சம்பளம், 753 ரூபாயில் இருந்து, 878 ரூபாயாக உயர்த்தப்பட்டு நான்கு மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.

துாய்மை பணியை தனியார் மயமாக்குவதால், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணா நகர் மண்டலங்களில், 4,892 பணியாளர்கள் பாதிக்கப்படுவர். அவர்களின் சம்பளமும் குறைந்துவிடும்.

ராயபுரம் மண்டலத்தில் பணிபுரிந்து வந்த நிரந்தர துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், இன்று ஓய்வு பெறும் நாளில், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு மாற்றி உள்ளனர். ஓய்வு நாளில் இடமாற்றம் சரியல்ல. மண்டலங்களில் துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us