/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறையில் சுகாதாரமற்ற உணவு அரசு பதிலளிக்க உத்தரவு
/
சிறையில் சுகாதாரமற்ற உணவு அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : ஆக 05, 2025 12:13 AM
சென்னை, 'புழல் சிறையில், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது' என, நீதிமன்றத்தில் கைதி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சிறை கைதி பைசுல் ஹுசைன் தாக்கல் செய்த மனு:
'உபா' எனும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்தாண்டு அக்டோபரில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டேன்.
புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனக்கு, சோப்பு, பிஸ்கட், தேங்காய் எண்ணெய் போன்றவை வழங்கப்படுவதில்லை. சரியான நேரத்திற்கு உணவும் வழங்கப்படுவதில்லை. சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது. முறையான மருத்துவ வசதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, ''கைதி அளித்துள்ள புகார் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு சிறைத் துறை டி.ஜி.பி., தமிழக உள்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.