/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு போட்டி தேசிய ஹாக்கி பயிற்சி தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் தயார்
/
விளையாட்டு போட்டி தேசிய ஹாக்கி பயிற்சி தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் தயார்
விளையாட்டு போட்டி தேசிய ஹாக்கி பயிற்சி தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் தயார்
விளையாட்டு போட்டி தேசிய ஹாக்கி பயிற்சி தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் தயார்
ADDED : ஜன 16, 2025 11:58 PM

மணலி, தேசிய ஹாக்கி பயிற்சிக்கான தேர்வில், சின்னசேக்காடு அரசு பள்ளி மாணவர்கள் 17 பேர் பங்கேற்க உள்ளனர்.
மணலி, சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஹாக்கி போட்டியில் அசத்தி வருகின்றனர்.
பள்ளிக் கல்வி துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் வென்று, தேனியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு - ஆர்மி பாய்ஸ் கம்பெனியின் எம்.இ.ஜி., சென்டர் சார்பில், தேசிய அளவிலான இளம் வீரர்களை தேர்வு செய்து, படிப்புடன் கூடிய சர்வதேச விளையாட்டு பயிற்சி வழங்கி வருகிறது.
அந்த பயிற்சிக்கான தேர்வு, ஜன., 20 - 23ல் பெங்களூருவில் நடக்கிறது. இதில், குத்துச்சண்டை, பாய்மரப்படகு, நீச்சல் மற்றும் ஹாக்கி போட்டிகளில், 8 - 14 வயதுடைய மாணவர்கள் பங்கேற்க முடியும்.
இந்த தேர்வில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 30 மீட்டர் வேகமாக ஓடுதல், 15 மீட்டர் செட்டில் ஓட்டம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் மூலம் தகுதி சுற்று நடக்கும்.
இதில், அதிக புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு, பெங்களூருவின், ஆர்மி பாய்ஸ் கம்பெனி - எம்.இ.ஜி., சென்டர் சார்பில், இலவசமாக படிப்பு, விளையாட்டு உபகரணங்கள், மருத்துவம், சர்வதேச பயிற்சியாளர்களால் அளிக்கப்படும் விளையாட்டு பயிற்சிகள் கிடைக்கும்.
அந்த பயிற்சிக்கான தேர்வில், சின்னசேக்காடு அரசு பள்ளியின், 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 17 பேர் பங்கேற்க உள்ளனர்.