/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பள்ளியில் 'மினி ஸ்டேடியம்' ரூ.3 கோடியில் அமைக்கிறது அரசு
/
அரசு பள்ளியில் 'மினி ஸ்டேடியம்' ரூ.3 கோடியில் அமைக்கிறது அரசு
அரசு பள்ளியில் 'மினி ஸ்டேடியம்' ரூ.3 கோடியில் அமைக்கிறது அரசு
அரசு பள்ளியில் 'மினி ஸ்டேடியம்' ரூ.3 கோடியில் அமைக்கிறது அரசு
ADDED : நவ 23, 2025 02:13 AM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே, சோமங்கலம் அரசு பள்ளி மைதானத்தில், தமிழக அரசு சார்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில், 'மினி ஸ்டேடியம்' அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் 2025 - 26ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையில், தமிழகத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளில் தலா மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'முதல்வர் மினி ஸ்டேடியம்' அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட குன்றத்துார் அருகே, சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, 3 கோடி ரூபாய் மதிப்பில், 400 மீட்டர் ஓடுதளம், அலுவலகம், பார்வையாளர்கள் கூடம், கைப்பந்து, வலைப்பந்து, கபடி, கோ - கோ, கால்பந்து ஆடுகளங்கள், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளன. கட்டுமான பணி விரைவில் துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.