/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' ட்ரோன் ' ஆராய்ச்சி மையத்தில் கவர்னர் ரவி ஆய்வு
/
' ட்ரோன் ' ஆராய்ச்சி மையத்தில் கவர்னர் ரவி ஆய்வு
ADDED : ஜூலை 11, 2025 12:17 AM

குரோம்பேட்டை, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் 'ட்ரோன்' எனும் ஆளில்லா விமானம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு, தமிழக கவர்னர் ரவி, நேற்று பார்வையிட்டார்.
ட்ரோன் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் மூலம் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் ராணுவத்திற்கும், நாட்டிற்கும் எவ்வாறு பயன்படுகிறது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, மையத்தின் நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
ஏ.பி.ஜே., அப்துல்கலாம் ஆளில்லா விமான ஆராய்ச்சி நிலைய இயக்குநர் செந்தில்குமார், 'இஸ்ரோ' முன்னாள் இயக்குநரும், ஏ.பி.ஜே., அப்துல்கலாம் ஆளில்லா விமான ஆராய்ச்சி நிலைய ஆலோசகருமான மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் விவரித்தனர்.