/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை மேம்பாலங்கள் அமைக்கவும் அரசு முடிவு
/
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை மேம்பாலங்கள் அமைக்கவும் அரசு முடிவு
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை மேம்பாலங்கள் அமைக்கவும் அரசு முடிவு
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை மேம்பாலங்கள் அமைக்கவும் அரசு முடிவு
ADDED : ஜன 22, 2024 01:27 AM
சென்னை:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய தேவை யை கருத்தில் வைத்து, அங்கு புதிய மேம்பாலங்கள் கட்டுவது, மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.
இந்த பேருந்து நிலையம், டிச., 30ல் திறக்கப்பட்டு, படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கத்துக்குச் செல்வதிலும், வெளியூர்களில் இருந்து வருவோர், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவும், இணைப்பு வசதி முறையாக இல்லை.
தற்போதைய நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் மட்டுமே ஒரே இணைப்பாக உள்ளன. இதையடுத்து வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய இணைப்பு வசதி குறைபாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, கிளாம்பாக்கத்திற்கு தேவையான புதிய திட்டங்களை உருவாக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சிக்கலின்றி நிர்வகிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தலைமையில், 9 பேர் அடங்கிய உயர் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜி.எஸ்.டி., சாலையில் புதிதாக மேம்பாலங்கள் கட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி இருக்கிறோம்.
இதற்கான பரிந்துரைகளை, அரசு கேட்டுப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசிடம் உள்ளது. இந்த விஷயத்தில், அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.