/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 31, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, காரப்பாக்கம் கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின், 23வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில், 915 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இவர்களில், முதல் 19 வரை இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசை, சென்னை சர்வதேச விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக், 'ஸ்டார்ட் ஆப் தமிழ்நாடு' அமைப்பின் இயக்குநர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் வழங்கினர்.
முன்னாள் மாணவர்களின் நிறுவனத்தையும் துவக்கி வைத்தனர். இங்கு படித்த, 94 சதவீதம் மாணவர்களுக்கு, வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என, கல்லுாரியின் இயக்குநர் ஆனி ஜேக்கப் தெரிவித்தார்.