/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாத்தா இறுதிச்சடங்கில் மின்சாரம் பாய்ந்து பேரன் பலி
/
தாத்தா இறுதிச்சடங்கில் மின்சாரம் பாய்ந்து பேரன் பலி
தாத்தா இறுதிச்சடங்கில் மின்சாரம் பாய்ந்து பேரன் பலி
தாத்தா இறுதிச்சடங்கில் மின்சாரம் பாய்ந்து பேரன் பலி
ADDED : அக் 19, 2024 12:20 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த, சென்னீர்குப்பம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அமைந்தகரை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,ஆக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சொக்கலிங்கம், நேற்று முன்தினம், உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடல், அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது. உறவினர்கள் அமர்வதற்கு வீட்டின் வெளியே பந்தல் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணனின் மகன் சரவணன், 25, தாத்தா சொக்கலிங்கத்தின் இறுதிச்சடங்கு பணிகளை கவனித்து வந்தார். பந்தலில் மின் விளக்கை பொருத்தியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே சரவணன் பலியானார். பூந்தமல்லி போலீசார் சரவணன் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.