தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/களைகட்ட துவங்கியது திராட்சை சீசன்

களைகட்ட துவங்கியது திராட்சை சீசன்

களைகட்ட துவங்கியது திராட்சை சீசன்


ADDED : ஜன 25, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,தமிழகத்தின் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பன்னீர், பச்சை திராட்சை அதிகளவில் விளைகின்றன. மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில், பச்சை, ஷரத், கல்பனா வகை கொட்டையில்லாத திராட்சைகள் அதிகளவில் விளைகின்றன.

தற்போது, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் திராட்சை சீசன் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தைக்கு பலவகை திராட்சை பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.

தினமும் 15 முதல் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் திராட்சை பழங்கள் வரத்து உள்ளது. இரண்டு கிலோ அட்டை பெட்டி, 15 கிலோ டிரேவில் அடைத்து அவை விற்பனைக்கு வருகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 80 ரூபாய் வரையும், அவை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சாலையோர கடைகள் மட்டுமின்றி, வாகனங்களிலும் வைத்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு திராட்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது விற்பனைக்கு வரும் திராட்சை பழங்களில் புளிப்பு தன்மை உள்ளது. பனிப்பொழிவு முடிந்து வெயில் காலம் துவங்கினால், இனிப்பு திராட்சைகள் அதிகளவில் கிடைக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us