/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.ஆர்.டி., மகாலட்சுமி விடுதி ஏழை மாணவர்களுக்கு இலவசம்
/
ஜி.ஆர்.டி., மகாலட்சுமி விடுதி ஏழை மாணவர்களுக்கு இலவசம்
ஜி.ஆர்.டி., மகாலட்சுமி விடுதி ஏழை மாணவர்களுக்கு இலவசம்
ஜி.ஆர்.டி., மகாலட்சுமி விடுதி ஏழை மாணவர்களுக்கு இலவசம்
ADDED : டிச 04, 2024 11:58 PM
சென்னை, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், சவாலான பின்னணியில் இருந்து வரும் தகுதியான மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், போரூரில் ஜி.ஆர்.டி., மகாலட்சுமி என்ற பெயரில் ஆண்கள் விடுதி கட்டி உள்ளது. இதில், தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த விடுதியில், 200 மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது. தற்போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் 60 பேர் தங்கியுள்ளனர்.
ஒவ்வொரு கல்வியாண்டும், முதலாம் ஆண்டு மாணவர்களை கூடுதலாக வரவேற்று, அவர்கள் படிப்பிலும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் கவனம் செலுத்த, பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்குகிறது.
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
உண்மையான சேவை என்பது வெறும் எண்ணத்திற்கு அப்பாற்பட்டது. அதற்கு கட்டுப்பாடும், கருணையும் அவசியம். ஜி.ஆர்.டி., மகாலட்சுமி ஆண்கள் விடுதியை துவக்கி, தடைகளை தாண்டி தங்கள் கனவுகளை நனவாக்க துடிக்கும் இளம் மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் பெருமைப்படுகிறோம்.
தகுதியான மாணவர்கள் உதவுவதை எங்கள் பொறுப்பாக மட்டும் அல்லாமல், பெருமையாக பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் கூறியதாவது:
ஜி.ஆர்.டி., மகாலட்சுமி ஆண்கள் விடுதி பொருளாதார பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் சத்தான உணவுகளை வழங்கி, தங்கள் கல்வியில் கவனம் செலுத்த உதவுகிறது. சமூக நலமும், கல்வி அணுகுமுறையையும் மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.