/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி மருத்துவமனைக்கு பசுமை கட்டட அங்கீகாரம்
/
கிண்டி மருத்துவமனைக்கு பசுமை கட்டட அங்கீகாரம்
ADDED : செப் 25, 2024 12:35 AM
சென்னை, சென்னை கிண்டி கிங் மருத்துவ நிலைய வளாகத்தில், 240 கோடி ரூபாயில், 1,000 படுக்கை வசதியுடன் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை, கடந்த ஆண்டு ஜூன் 15ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த கட்டடம் பசுமை கட்டுமான வழிமுறைகளை பின்பற்றி கட்டப்பட்டதாக பொதுப்பணித்துறை அறிவித்து இருந்தது.
இதற்கான சான்றிதழ் பெற, பொதுப்பணித் துறை, இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ.,யின் இந்திய பசுமை கட்டடங்கள் கவுன்சிலான ஐ.ஜி.பி.சி.,யிடம் விண்ணப்பித்தது.
வல்லுனர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் அடிப்படையில் சுகாதார வசதிகளுக்கான கட்டடங்கள் பிரிவில் தங்க சான்று வழங்க ஐ.ஜி.பி.சி., அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, தங்க சான்றை, சென்னையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், ஐ.ஜி.பி.சி., சென்னை பிரிவு தலைவர் அஜீத் சோர்டியா நேற்று வழங்கினார்.
அப்போது, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, மருத்துவமனை இயக்குனர் எல்.பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.