/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அடிக்கப்பட்ட பச்சை நிற 'லேசர்' ஒளியால் பீதி

ADDED : மே 27, 2025 01:02 AM

சென்னை, துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது அடிக்கப்பட்ட பச்சை நிற லேசர் ஒளியால் பயணியர் பதறினர். அதேபோல, விமானிகளும் தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், 326 பயணியருடன் புறப்பட்டது.
சென்னை வந்த விமானம் தரையிறங்குவதற்காக உயரத்தை குறைத்து கொண்டிருந்தது. அப்போது, பரங்கிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து, விமானத்தின் மீது அதிக ஒளியுடன் பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
ஜன்னல் ஓரத்தில் இருந்த பயணியர், இதை பார்த்து பதறினர். விமானிகளும் நிலை தடுமாறியதாக கூறப்படுகிறது. தாழ்வாக பறந்த விமானம், மீண்டும் உயர பறக்க துவங்கியது. அதேநேரம், சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பி.சி.ஏ.எஸ்., எனும் சிவில் விமான பாதுகாப்பு பணியகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விமானம் பத்திரமாக இரவு சென்னையில் தரையிறங்கியது.
விமானத்தின் மீது லேசர் ஒளி அடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என, விமான நிலைய ஆணையம் சார்பில் எச்சரிக்கை அனுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக, சிலரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.