/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவில் ரூ.8.63 கோடியில் உருவாகுது பசுமை பூங்கா
/
கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவில் ரூ.8.63 கோடியில் உருவாகுது பசுமை பூங்கா
கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவில் ரூ.8.63 கோடியில் உருவாகுது பசுமை பூங்கா
கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவில் ரூ.8.63 கோடியில் உருவாகுது பசுமை பூங்கா
ADDED : நவ 27, 2024 12:18 AM

கோயம்பேடு,
கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவின் கீழ், 5 ஏக்கர் பரப்பளவில், 8.63 கோடி ரூபாயில், பசுமை பூங்கா அமைக்கும் பணியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ., ஈடுபட்டு உள்ளது.
கோயம்பேடு மேம்பாலம் ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தன. பிளாஸ்டிக் பொருட்களும், பயன்படுத்தப்பட்ட டயர்களும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றி, ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் செலவில், 40,000 சதுர அடி பரப்பில், செயற்கை நீரூற்றுடன் பூங்காவை, சி.எம்.டி.ஏ., அமைத்தது. கடந்த ஆண்டு குடிநீர் வாரியம் மேற்கொண்ட பணிகளால் இந்த பூங்கா சேதமடைந்துள்ளது.
அதே மேம்பாலத்தில், தே.மு.தி.க., அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவுகள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள கட்ட கழிவுகள் எல்லாம் அகற்றப்பட்டு, பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கோயம்பேடு உள்வட்டசாலை மற்றும் சென்னை - பூந்தமல்லி சாலை சந்திப்பு பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில், 8.63 கோடி ரூபாயில், இயற்கை அழகுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கும் பணியில், சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளன.
இந்த பசுமை பூங்காவில், சுற்றுப்புற காற்றின் துாய்மையை காக்கும் வகையில், மரங்கள் மற்றும் செடிகள்; நடைபாதை மற்றும் இருக்கைகள், 50 பேர் அமரக்கூடிய அரங்கம்; சிறுவர்கள் விளையாட்டு திடல்; யோகா மற்றும் தியான கூடம்.
மேலும், உடற்பயிற்சி கூடம்; பைக் மற்றும் கார் பார்க்கிங் வசதி; செயற்கை நீருற்று ஆகியவை அமைய உள்ளன. ஆறு மாதங்களில் இந்த பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.

