/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரீன்வேஸ் - அடையாறு சுரங்கம் பணி வெற்றிகரமாக நிறைவு செய்தது 'காவிரி'
/
கிரீன்வேஸ் - அடையாறு சுரங்கம் பணி வெற்றிகரமாக நிறைவு செய்தது 'காவிரி'
கிரீன்வேஸ் - அடையாறு சுரங்கம் பணி வெற்றிகரமாக நிறைவு செய்தது 'காவிரி'
கிரீன்வேஸ் - அடையாறு சுரங்கம் பணி வெற்றிகரமாக நிறைவு செய்தது 'காவிரி'
ADDED : செப் 21, 2024 12:18 AM

சென்னை,
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 116.1 கி.மீ., துாரத்தில் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன.
இதில், 45.4 கி.மீ., துாரமுள்ள மாதவரம் - சிறுசேரி சிப்காட் தடத்தில், பசுமை வழிச்சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ., துாரத்திற்கான சுரங்கப்பாதை பணி, கடந்தாண்டு பிப்., 16ல் துவங்கியது.
இதற்காக 'காவிரி, 'அடையாறு' ஆகிய இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
முதல் இயந்திரமான 'காவிரி' கடந்த ஜூனில் அடையாறு மேம்பாலத்தின் கீழ் இருந்து பணியை துவங்கியது. வலுவான பாறைகள் காரணமாக, பணிகள் சற்று மெதுவாகவே நகர்ந்தன.
இந்நிலையில், இந்த சுரங்கம் இயந்திரம், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்து, நேற்று முன்தினம் அடையாறு சந்திப்பை வந்தடைந்தது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, ரவிச்சந்திரன், லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவன இயக்குனர் ஜெயராம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
65 முறை கருவி சீரமைப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
'காவிரி' இயந்திரம், அடையாறு பகுதி மற்றும் ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள கடினமான பாறைகளை குடைந்தெடுத்து வந்துள்ளது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள், 65 முறை சீரமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம், தற்போது அடையாறு நிலையத்தில் இருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது.
வரும் நவம்பருக்குள் அடையாறு நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.